முன்னாள் பெண் கவுன்சிலர் தற்கொலை
ராமநத்தம்: ஆவட்டியில் தி.மு.க., முன்னாள் ஒன்றிய பெண் கவுன்சிலர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநத்தம் அடுத்த ஆவட்டியைச் சேர்ந்தவர் சாமிதுரை மனைவி சிவமலை, 53; தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.