உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஸ்வீட், காரம், பட்டாசு பண்ருட்டியில் மாஜி அமைச்சர் சம்பத் வழங்கல்

அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஸ்வீட், காரம், பட்டாசு பண்ருட்டியில் மாஜி அமைச்சர் சம்பத் வழங்கல்

பண்ருட்டி: பண்ருட்டியில் அ.தி.மு.க., சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஸ்வீட், காரம், பட்டாசு ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் சம்பத் வழங்கினார். பண்ருட்டியில் நகர அ.தி.மு.க., சார்பில் 65 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எழில் ராஜ், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தீபாவளி பரிசாக ஸ்வீட், காரம், பட்டாசு ஆகியவற்றை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும். நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் என 2000 பேருக்கு முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் சம்பத் வழங்கினார். பண்ருட்டி நகர அவைத் தலைவர் ராஜதுரை, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், அண்ணா கிராமம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலு, நகர இணைச் செயலாளர் சத்யா கலைமணி, மாவட்ட பிரதிநிதி ஷர்புனிசா சலாவுதின், மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் கார்த்தி, வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை