உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி., ஒன்றிய சேர்மன் மீது மோசடி வழக்கு

மாஜி., ஒன்றிய சேர்மன் மீது மோசடி வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் அருள் மணிகண்டன், 25. இவர், அதே பகுதியை சேர்ந்த விருத்தாசலம் முன்னாள் ஒன்றிய சேர்மன் செல்லதுரை, 36; என்பவரிடம் கிராம உதவியாளர் பணிக்கு மூன்று தவணையாக ரூ.8 லட்சம் பணம் கொடுத்ததாககூறப்படுகிறது.இந்நிலையில், செல்லதுரை இதுவரை வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் அருள்மணிகண்டனை இழுத்தடித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 18ம் தேதி அருள் மணிகண்டன் பணத்தை திருப்பி தருமாறு செல்லதுரையிடம் கேட்டுள்ளார். அப்போது, செல்லதுரை, அருள்மணிகண்டனை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் செல்லதுரை மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி