உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள்; மல்யுத்தப்போட்டியில் பதக்கங்கள் குவிப்பு

ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள்; மல்யுத்தப்போட்டியில் பதக்கங்கள் குவிப்பு

திட்டக்குடி; சேலத்தில் நடந்த மாவட்ட அளவிலான மல்யுத்தப்போட்டியில் வெற்றி பெற்ற ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி, சேலம் ஜோகிந்த்ரா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளி சார்பில் மாணவி அனுப்பிரியா, 17வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.அதேபோல் மாணவிகள் ஹரிணி, மகாலட்சுமி, மாணவர்கள் ஜெயப்பிரகாஷ், மனோபிரசாத் 20வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றனர். மல்யுத்த போட்டியில் ஒரு தங்கம், நான்கு வெண்கலம் வென்று சாதனை படைத்த ஞானகுரு வித்யாலயா பள்ளி வீரர், வீராங்கனைகளை பள்ளி நிறுவனர் கோடி, பள்ளி தாளாளர் சிவகிருபா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.பள்ளி முதல்வர் அய்யாதுரை, நிர்வாக அலுவலர் சித்ரா, உடற்கல்வி ஆசிரியை பிரியா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ