உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளி ஆண்டுவிழா

அரசு பள்ளி ஆண்டுவிழா

பெண்ணாடம்; பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவதியாகராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, அருணா மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஞானபிரகாசம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் செம்பியன், சுந்தரபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் ராம் மோகன், அரிமா சங்க தலைவர் சக்திவேல், உதவி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், பள்ளியில் முன்னதாக நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முதுகலை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !