மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்
11-Aug-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் களர்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி யில் உள்ள ஹரிதாஸ் குட்டையில், அதே பகுதி யைச் சேர்ந்த ராஜ்மோகன், அய்யப்பன் ஆகியோர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார், ராஜ்மோகன், அய்யப்பன் மீது வழக்குப் பதிந்து, டிப்பர் லாரி, ஜே.சி.பி., யை பறிமுதல் செய்தனர்.
11-Aug-2025