உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் காயமடைந்த முதியவரின் பணம் ஒப்படைப்பு

விபத்தில் காயமடைந்த முதியவரின் பணம் ஒப்படைப்பு

கடலுார்: விபத்தில் காயமடைந்த முதியவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கைப்பற்றி, அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.கடலுார் அடுத்த வேகாக் கொல்லை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 66; இவர், சிதம்பரம் அடுத்த பொய்யாபிள்ளை சாவடி புறவழிச் சாலையில் பைக்கில் சென்றபோது விபத்தில் காயமடைந்தார்.தகவலறிந்த சிதம்பரம மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நுட்புனர் சினேகா, டிரைவர் மணிகண்டன் ஆகியோர் ஆறுமுகத்தை மீட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது, ஆறுமுகத்திடம் 36 ஆயிரத்து 314 ரூபாய், ஒரு மொபைல் போன், டைரி மற்றும் பைக் சாவியை ஆறுமுகம் உறவினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை