உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போராடி கூலி உயர்வு பெற்ற கைத்தறி நெசவாளர்கள்

போராடி கூலி உயர்வு பெற்ற கைத்தறி நெசவாளர்கள்

கடலுார் கைத்தறி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்களில் சுமார் 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர்.இந்த சங்கத்தில் உற்பத்தி செய்யும் கைத்தறி கைலிரகத்திற்கு 8 கைலிக்கு ரூ.1678 கூலியாக வழங்கி வந்தனர்.ஆனால் வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 8 கைலிகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியாக ரூ.2102 வழங்கி வருகின்றனர்.இதுகுறித்து தகவலறிந்த நெசவாளர்கள் கடலுார் மாவட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும் 8 கைலிகளுக்கு குடியாத்தத்தில் கொடுக்கப்படும் அதே கூலியை வழங்கிட போராட்டம் நடத்தினர். மேலும் கைத்தறி உதவி இயக்குனருக்கு பலதரப்பிலிருந்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.அதனடிப்படையில் தற்போது கடலுார் மாவட்டத்தில் கைலி ரகங்களை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு குடியாத்தத்தில் கொடுக்கப்படும் அதே கூலியான ரூ.2102 யை கடந்த நவம்பர் மாதம் 15 ம் தேதி முதல் வழங்கிட உத்திரவிட்டுள்ளார்.இந்த கூலி உயர்வு சரியான முறையில் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் கொடுக்கின்றவா என ஆய்வு செய்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ