உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் இடியுடன் கனமழை முக்கிய சாலைகளில் வெள்ளம்

கடலுாரில் இடியுடன் கனமழை முக்கிய சாலைகளில் வெள்ளம்

கடலுார்: கடலுாரில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன் உருவான 'டானா' புயல் நேற்று தீவிர புயலாக உருப்பெற்று ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் நகர்ந்து சென்றதால் தமிழகத்தில் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் 19 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் நேற்று காலை கடும் வெயில் தாக்கியது.மதியத்திற்கு மேல் வானத்தில் திடீரென கரு மேக கூட்டம் சூழ்ந்தது. தொடர்ந்து 3:00 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கடலுாரில் முக்கிய சாலையான லாரன்ஸ் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க குவிந்த பொது மக்கள் மழையில் நனைந்தபடி அங்குமிங்குமாக ஒதுங்கினர். இந்த கனமழை மாலை 4.30 மணி வரை நீடித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை