கடலுாரில் கடும் பனிப்பொழிவு
கடலுார் : கடலுாரில் நேற்று வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இரவு 8:00 மணியளவில் துவங்கும் பனிப்பொழிவின் தாக்கம் காலை 8:00 மணி வரை நீடிக்கிறது. அதிலும் நேற்று கடலுாரில் வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை போட்டப்படி சென்றனர்.காலை 9:00 மணிக்குமேல் சூரிய ஒளி வந்த பிறகே, பனிப்பொழிவு படிப்படியாக குறைந்து, சகஜ நிலை திரும்பியது. இந்த கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.கடலுார் மட்டுமின்றி விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று பனிப்பொழிவு அதிகம் இருந்தது.