உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னேற்பாடு கூட்டம்
கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் நடக்கிற கல்லுாரி கனவு நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டம் நடந்தது.கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'கல்லுாரி கனவு திட்டமானது நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கம். கல்லுாரி கனவு திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாடடும் வகையில் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடக்கிறது.இத்திட்டத்தின் மூலம், மாணவர்கள் உயர்கல்விக்கான சரியான வழிகாட்டுதல் பெற்று, இலக்குகளை அடைவதற்கு தன்னம்பிக்கை பெற முடியும். கல்லுாரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலம் பல்வேறு வகையான படிப்புகள் சார்ந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது.கூட்டத்தில் சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.