மேலும் செய்திகள்
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
30-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.யு.ஜி.சி., பரிந்துரை செய்த ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை, பணி நிரந்தரம் தொடர்பாக மதுரை மற்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டுமென உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.அதன்படி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், மாநில துணை தலைவர் சிவா தலைமையில் கடந்த 4ம் தேதி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக வாயிற் முழக்க போராட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
30-Jan-2025