உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனித சங்கிலி போராட்டம்; 23ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

மனித சங்கிலி போராட்டம்; 23ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கடலுார் : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 17 ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மனித சங்கிலி போராட்டம் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது; தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டம், நிரந்தர ஊதிய விகிதம், பணி வரன்முறை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 17ம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடந்தபோது, கனமழை, புயல் வருவதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில் பணியாளர்களை நேரில் சென்று சந்தித்து, மனித சங்கிலி போராட்டத்திற்கான அழைப்பு விடுப்பதில் பல்வேறு சிரமங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. வரும் 17ம் வரை மழை இருப்பதால், அன்று நடக்கவிருந்த மனித சங்கிலி போராட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி