உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் கைது 

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் கைது 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த விளாகம் சின்ன தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ராமராஜன், 27; இவர், கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.திருமணத்திற்கு பின் தனியாக வசித்து வந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். நேற்று முன்தினம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது மூன்றரை மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து டாக்டர்கள் அளித்த தகவலின் பேரில் ஒரத்துார் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து ராமராஜனை கைது செய்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ