கணவர் மாயம்: மனைவி புகார்
பண்ருட்டி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி அடுத்த புலவனுாரைச் சேர்ந்தவர் பாலகுருநாதன்,43; பெயிண்டர். இவர் கடந்த 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு வேலைக்கு கோயம்புத்துாருக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பின் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சத்யா,32; அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, பாலகுருநாதனை தேடிவருகின்றனர்.