உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு

ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சார்பில், 4 லட்சம் ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு விழா நடந்தது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் 1976 - 79 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறைத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார். கலைப்புல முதல்வர் விஜயராணி தலைமையுரையாற்றினார்.முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனர் கார்த்திகேயன், சசிகலா, நல்லாசிரியர். திருநாவுக்கரசு, குருநாதன் ஆகியோர் பேசினர்.விழாவில், முன்னாள் மாணவர்கள் சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்..விழாவில், முன்னாள் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை