உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சத்துணவு உதவியாளர் பணிக்கு நேர்காணல்

சத்துணவு உதவியாளர் பணிக்கு நேர்காணல்

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில், சத்துணவு உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடந்தது.விருத்தாசலம் ஒன்றிய சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 25 மையங்களுக்கு சத்துணவு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மீனா, தாசில்தார் அரவிந்த், பி.டி.ஓ.,க்கள் சங்கர், லட்சுமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். அதில், 25 மையங்களுக்கு விண்ணப்பித்த 180 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது. நேர்காணல் முடிவுகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ