| ADDED : பிப் 11, 2024 03:11 AM
கடலுார்: கடலுாரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.கடலுார் மாவட்ட 'ஜாக்டோ- ஜியோ' போராட்ட ஆயத்த மாநாடு, கடலூர் வில்வநகர் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மணவாளன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ஜெகந்நாதன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உடன் வழக வேண்டும். இடைநிலை உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் 15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது, 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், குமரகுருபரன் பங்கேற்றனர்.