கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கணபதி நகர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.மந்தாரக்குப்பம் கணபதி நகர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று காலை 7:30 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜைகள் நடந்தன.இன்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி நாடி சந்தானம்,சகஸ்ரநாம அர்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெய்வேலி கன்னிகா பரமேஸ்வரி ஆரிய வைசிய சமாஜம்,விழா குழுவினர் செய்து வருகின்றனர்.