மேலும் செய்திகள்
பாலமுருகன் கோவில் தேர் திருவிழா
11-Apr-2025
விருத்தாசலம்: பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் பங்குனி உத்திரத்தையொட்டி காவடி ஊர்வலம் நடந்தது. விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கோவில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் வான வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் (10ம் தேதி) மாலை 4:30 மணியளவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, காலை 11:00 மணிக்கு காவடி ஊர்வலம் நடந்தது.
11-Apr-2025