கிசான் திட்ட பயனாளிகள் சரிபார்ப்பு சிறப்பு முகாம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலம் கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்ட பயனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில், கீரப்பாளையம் வட்டாரத்தில் 9 ஆயிரம் விவசாயிகள் பதி வேற்றம் செய்யப்பட்டு, ஆண்டிற்கு மூன்று தவணை யில் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பயனாளிகள் உண்மை தன்மை சரிபார்ப்பு முகாம் நேற்று நடந்தது. கடலுார் வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குார் பங்கேற்று ஆய்வு செய்தார்.இத்திட்டத்தில் வங்கி கணக்கை இணைத்தல் நில பதிவேற்றம், கே.ஓய்.சி., ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என விவாயிக ளிடம் கேட்டுக்கொண்டார்.கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலு வலர் சிவப்பரியன், உதவி வேளாண் அலுவலர் ராயப்பநாதன் உடனிருந்தனர்.