கும்பாபிஷேக ஆண்டு விழா
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் காமாட்சிபேட்டை ஜோதி விநாயகர் கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.அதையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சங்கு அபிஷேகம் மற்றும் 108 கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.