மேலும் செய்திகள்
தீர்த்தக்குட ஊர்வலம்
27-Aug-2025
கடலுார்: டி.குமராபுரம் முத்தாலுவாழியம்மன் கோவிலில், வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார் அடுத்த டி.குமராபுரம் முத்தாலுவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, கோ பூஜை, தன பூஜைகள் நடந்தது. இன்று (8ம் தேதி) காலை நவக்கிரக பூஜை ஹோமம் நடக்கிறது. நாளை (9ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 10ம் தேதி காலை விசேஷ சந்தி சோமகும்ப பூஜை, சூர்ய பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர வேதமந்திர, மாலாமந்திர ஹோமம், பாராயணம் நடக்கிறது. 11ம் தேதி காலை கணபதி பூஜை, புண்யாஹம், வேதிகார்ச்சனை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, திரவ்யாஹுதி நடக்கிறது. தொ டர்ந்து, யாத்ரா தானம், கலச புறப்பாடு, ஆலய பிரவேசமமும், 9:45மணிக்கு மூலவர் விமானம் கும்பாபிஷேகமும், 10:15மணிக்கு முத்தாலுவாழியம்மன், பத்ரகாளியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக ம் நடக்கிறது. 11:30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கு கிறது.
27-Aug-2025