உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கடலுார் : கடலுார் வண்ணாரப்பாளையம் பீச் ரோடு சாந்த ரூப ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று 21ம் தேதி காலை 9:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், அனுக்ைஞ, கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவகிரக ேஹாமம், கோ பூஜை, கோபுர கலசங்கள் படிய வைத்தல் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், கும்பாலங்காரம் யாகசாலை, முதல்கால யாக சாலை பூஜை நடந்தது.இன்று 22ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு, காலை 9:45 மணிக்கு சாந்த ரூப ஆஞ்சநேயர் விமான மகா கும்பாபிஷேகம் மற்றும் காலை 10:00 மணிக்கு சாந்த ரூப ஆஞ்சநேயர் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை