உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

 நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கடலுார்: கடலுாரில் நடந்த நில அளவை அலுவலகர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, கடந்த 18ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவியரசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நீலராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த போராட்டத்தில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும்; ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்; என்பன உள்ளிட்ட 18 கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், புல உதவியாளர் சங்க மாநில தலைவர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை