உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழுநோய் கண்டறியும் முகாம்

தொழுநோய் கண்டறியும் முகாம்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் பகுதியில் தொழுநோய் கண்டறியும் முகாம் நடந்து வருகிறது. குள் ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளான அம்பலவாணன்பேட்டை, திம்மராவுத்தன்குப்பம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 10 குழுக்களாக மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் பெருமாள், சுகாதார ஆய்வாளர் சுகன், சுகாதார செவிலியர் சுமதி, தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி