உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோர்ட்டுகளில் லோக் அதாலத் கடலுாரில் ஆலோசனை கூட்டம்  

 கோர்ட்டுகளில் லோக் அதாலத் கடலுாரில் ஆலோசனை கூட்டம்  

கடலுார்: கடலுார் கோர்ட்டில் 'லோக் அதாலத்' தொடர்பான ஆலோசனை நடந்தது. கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் டிச., 13ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தலைமையில் கடலுார் கோர்ட்டில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி குலசேகரன், முதலாவது மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி ஆனந்தன், இரண்டாவது மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ் கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தனம், எஸ்.பி., ஜெயக்குமார், பார் அசோசியேஷன் செயலாளர் லெனின், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், டிச., 13ம் தேதி நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிகளவில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காண வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளும் காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை