உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லோக்சபா நிலைக்குழுவினர் நடராஜர் கோவிலில் தரிசனம்

லோக்சபா நிலைக்குழுவினர் நடராஜர் கோவிலில் தரிசனம்

சிதம்பரம்: லோக்சபா நிலைக்குழுவை சேர்ந்த 8 எம்.பி.,க்கள் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் ஆய்வு பணி மேற்கொண்ட லோக்சபா நிலைக்குழுவினர் தலைவர் பிரிஜ்லால் தலைமையில் சத்யாபால் சிங், நிராஜ் சிக்கர், ராகேஷ் சிங்கா உள்ளிட்ட 8 எம்.பி.,க்கள் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களை, கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர் தலைமையில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி.,ராஜாராம், சப் கலெக்டர் ரஷ்மிராணி உட்பட அதிகாரிகள் வரவேற்றனர்.எம்.பி.,க்கள் குழுவினர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜரை தரிசனம் செய்தனர். பின்னர், அண்ணாமலை பல்கலை., விருந்தினர் மாளிகைக்கு சென்றனர்.லோக்சபா நிலைக்குழுவினர் வருகையை ஒட்டி சிதம்பரம் நான்கு வீதிகளில் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை