மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
29-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலத்தில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திருமால், 47; என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தனிப்பிரிவு போலீசார் அவரை பிடித்து விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடன், போலீசார் வழக்குப் பதிந்து திருமாலை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
29-Apr-2025