உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மா.கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுாரில் மாவட்ட மா.கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராமச்சந்திரன், திருவரசு, தேன்மொழி, நகர செயலாளர் தேவராஜ், பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் தண்டபாணி, தினேஷ் பாபு பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், உத்திராபதி, பிரகாஷ், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை பணியை முழுமையாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலுார், சோழதரம் உள்ளிட்ட 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ