உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு கிராமம் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு கிராமம் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முனதினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவஜனம். பஞ்சகவ்யம், கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், திரவிய ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. மாலை வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு விநாயகர், மகா சக்தி மாரியம்மன், வரதராஜபெருமாள் கோவில் சன்னதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !