மேலும் செய்திகள்
தேசிய விளையாட்டு தின பரிசளிப்பு விழா
05-Sep-2024
கடலுார் : நாகை, புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான பூப்பந்து விளையாட்டு போட்டிகள் கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.போட்டியில் நாகை, புதுச்சேரி மண்டலத்தைச் சேர்ந்த 10 அணிகளை கொண்ட 60 வீரர்கள் பங்கேற்றனர். இதில், கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் ஒட்டு மொத்த விளையாட்டில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்று இரண்டாவது ஆண்டாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.இரண்டாம் பரிசு திருவாரூர் மாவட்டம் கொலுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லுாரி, மூன்றாம் பரிசு புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் , நான்காம் பரிசு சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரி பெற்றது.வெற்றிபெற்ற அணிகளுக்கு மகாலட்சுமி கல்வி குழும தலைவர் ரவி, கல்லுாரி தாளாளர் தேவகி பங்கேற்று சாம்பியன்ஷிப் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.நிகழ்ச்சியில் கல்லுாரி துணைத் தலைவர் ராக்கவ்தினேஷ், முதல்வர் சின்ராஜ், மேலாளர் விஜயகுமார், அஷ்லி, உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
05-Sep-2024