உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது

ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள ேஹாட்டலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு, கோவில் எதிரே உள்ள பைக் ஸ்டேண்டில் நிறுத்தியிருந்த தனது பைக்கை, எடுக்க சென்றார்.ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா என்பவர், பிரபாகரனை சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பிரபாகரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து பிரபாகரன் மனைவி பத்மாவதி கொடுத்த புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, இளையராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை