மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற முதியவர் கைது
08-Sep-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தன்னுடன் மது குடிக்க வரவில்லை எனக் கூறி, வாலிபரை பேனா கத்தியால் கிழித்த தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த பெரியவடாடி, மேட்டு தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார், 30; இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன், மது குடிப்பதை நிறுத்துவதற்காக, அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தனது கையில் கயிறு கட்டினார். நேற்று முன்தினம் இரவு கயிறை அவிழ்த்துவிட்டு, அதே பகுதியில் தனியாக மது குடித்தார். இதையறிந்து குடிபோதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், 50; என்பவர், தன்னுடன் ஏன் மது குடிக்க வரவில்லை என கூறி, தினேஷ்குமாரிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த செந்தில் மற்றும் அவரது மகன்கள் தமிழ்செல்வன், 24; சீனு, 22, ஆகிய மூவரும் சேர்ந்து தினேஷ்குமாரை அசிங்கமாக திட்டினர். மேலும், தமிழ்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால், தினேஷ்குமாரை கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கிழித்தார். இதில், காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்து, தமிழ்செல்வன், சீனுவை தேடி வருகின்றனர்.
08-Sep-2025