மேலும் செய்திகள்
சாலை விபத்து: இளம்பெண் பலி
09-Dec-2024
திட்டக்குடி : திட்டக்குடியில் மொபட் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி, சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. இவர் கடந்த 2ம் தேதி இரவு 9:00 மணியளவில், தனது மொபட்டை அதே பகுதியில் உள்ள மெடிக்கல் முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, காணவில்லை.இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் திட்டக்குடி - அகரம் சீகூர் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே சந்தேகத்தின்பேரில் மொபட்டில் வந்தவரை நிறுத்த விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம், சோழபாண்டி அடுத்த தென்பாதி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சிலம்பரசன், 46, என்பதும், திட்டக்குடி ராஜேந்திரன் என்பவரது மொபட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, சிலம்பரசனை கைது செய்தனர்.
09-Dec-2024