உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டலாபிேஷகம் நிறைவு விழா

மண்டலாபிேஷகம் நிறைவு விழா

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபி ேஷகம் நிறைவு விழா நடந்தது.மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 16ம் தேதி கும்பாபிேஷகம் விழா நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபி ேஷகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று காலை 9;00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகாயாகம் நடந்தது. அதை தொடர்ந்து யாகத்தின் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலயத்தை சுற்றி வந்து அம்மனுக்கு ் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெய்வேலி கன்னிகா பரமேஸ்வரி ஆலயம், ஆரிய வைசிய சமாஜம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி