உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டலாபிஷேக பூர்த்தி விழா

மண்டலாபிஷேக பூர்த்தி விழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, கீழ்செட்டி தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணியளவில் ேஹாமத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக கொண்டு வரப்பட்டு, விநாயகருக்கு கலச அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை