உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்கலம்பேட்டை பள்ளி ஆண்டு விழா

மங்கலம்பேட்டை பள்ளி ஆண்டு விழா

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், பொருளாளர் கோபு, துணைத் தலைவர் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார்.தமிழாசிரியர் லீமாரோஸ் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் சங்கர ஈஸ்வரி, பென்னட் ராஜ்குமார், பாபாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.டாக்டர் கதிர்வேல், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் அப்துல் பாரி, ரங்கசாமி, பேரூராட்சி துணை சேர்மன் தாமோதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ