மேலும் செய்திகள்
கும்பாபிேஷகம்
30-Aug-2025
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை தெருவில் உள்ள பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, விநாயகர், பாலமுருகன், பேட்டை மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.
30-Aug-2025