உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேவை கட்டணம் உடனடியாக செலுத்த கடலுார் கமிஷனர் அறிவுறுத்தல்

சேவை கட்டணம் உடனடியாக செலுத்த கடலுார் கமிஷனர் அறிவுறுத்தல்

கடலுார்: கடலுார் மாநகராட்சி 45 வார்டுகளிலும் திடக்கழிவு விதிகளின் படி பயனீட்டாளர் சேவை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.இச்சேவை கட்டணம் மூலம், மாநகராட்சி சார்பில் அடிப்படை தேவைகளான கழிவுநீர்க் கால்வாய் பராமரித்தல், பொது கழிப்பறை பராமரிப்பு, பாதாள சாக்கடை பராமரிப்பு மற்றும் தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி, திடக்கழிவுகளை சேகரித்தல், நகரை துாய்மையாக பராமரித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.மேலும், தினசரி 100 கிலோ திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் அல்லது 5000 ச.மீட்டர் பரப்பளவு கொண்ட வணிக நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் உருவாகக்கூடிய திடக்கழிவுகளை தாங்களே சொந்தப் பொறுப்பில் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். பயன்பாட்டு சேவைக் கட்டணம் மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமாகும்.மேலும், மிகைக்கழிவு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உருவாகும் மிகைக்கழிவுகளை முழுவதுமாக அகற்றாமல் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகள், கால்வாய்கள், காலியிடங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளிலோ கொட்டி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தும் சூழல் ஏற்படுகிறது.எனவே, வணிக நிறுவனங்கள் மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பயனீட்டாளர் சேவை கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ