அடிப்படை வசதியில்லா சந்தை : மக்கள், வியாபாரிகள் பாதிப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடலுார் பண்ருட்டி சாலையோரம் திங்கட்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு கருவாடு, காய்கறி அதிக அளவில் விற்பனைக்கு வரும். இவற்றை வாங்க ஏராளமான மக்கள் வருகின்றனர். சந்தையில் கடை அமைக்கும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால், சந்தையில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. கருவாடு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் இடங்கள் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் காய்கறி, கருவாடு விற்பனை குறைந்தது.