உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம்

 பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம்

கடலுார்: பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., மற்றும் வடக்குத்து ரோட்டரி சங்கம், பிம்ஸ் மருத்துவ கல்லுாரி சார்பில் தட்டாம்பாளையம் கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு, அண்ணாகிராமம் வடக்கு ஒன்றிய செயலாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் ராஜா வரவேற்றார். வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சிவமணி, பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜெகன், முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் கதிரவன், முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், நிர்வாகி பாலகுரு, மாவட்ட மாணவர் சங்க துணைத் தலைவர் அர்ஜூன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகதாஸ், ஊடக பேரவை செயலாளர் கோகுல், மாணவர் சங்க செயலாளர் ஆகாஷ், தலைவர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், பல், எலும்பு, இதயம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ