| ADDED : ஜன 18, 2024 04:38 AM
மந்தாரக்குப்பம்: அ.தி.மு.க., கீழ்பாதி கிளைக் கழகம் சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வழிகாட்டுதல்படி, எம்.ஜி.ஆர்., 107 வது பிறந்தநாளையொட்டி கீழ்பாதி அ.தி.மு.க.,, கிளை கழகம் சார்பில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாக்குறிச்சி, கீழ்பாதி, வடலுார் உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் பெருமைகள் குறித்து கீழ்பாதி ராஜவர்மன் பேசினர். அதை தொடர்ந்து வடலுார் சாய்பாபா கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. டாக்டர் பிரியதர்ஷன், நிர்வாகிகள் சக்திவேல், சிலம்பரசன், தீபன், சக்கரவர்த்தி, மணிவண்ணன், மணி, தங்கமணி, நத்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்