உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் மகா சக்தி மாரியம்மன்கோவிலில் தீமிதி விழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. 7ம் உற்சவமான நேற்று காலை 9:00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், பால் காவடி சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின், மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை