உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உதயநிதி பிறந்த நாள் மாரத்தான் அமைச்சர் துவக்கி வைப்பு

 உதயநிதி பிறந்த நாள் மாரத்தான் அமைச்சர் துவக்கி வைப்பு

பெண்ணாடம்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த, மாநில அளவிலான மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண்ணாடம் அடுத்த இறையூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர். இதில், இறையூர் - தொழுதுார் வரை 23 கி.மீ., மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்களும், திட்டக்குடியில் துவங்கிய 13 கி.மீ., ஓட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். அதில், ஆண்கள் பிரிவில் கோயம்புத்துாரைச் சேர்ந்த சதீஷ்குமார் முதலிடமும். பிரதீஸ்குமார் இரண்டாமிடமும், தேனி நிதீஷ்குமார் மூன்றாமிடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் பிரியதர்ஷினி முதலிடம் மற்றும் வினிதா இரண்டாமிடம், சரஸ்வதி மூன்றாமிடம் பிடித்தனர். மாரத்தானில் வென்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் ரொக்கம், கேடயம், பரிசு வழங்கி பாராட்டினார். டி.எஸ்.பி., க்கள் விருத்தாசலம் பாலகிருஷ்ணன், திட்டக்குடி பார்த்திபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி