உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு

விருத்தாசலம் பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண் டார்.பள்ளி வகுப்பறை, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை ஆய்வு செய்த அமைச்சர், மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் உள்ள நுாற்றாண்டு அரங்கம் மற்றும் மைதானத்தை பார்வையிட்டார்.ஆய்வின்போது, விருத்தாசலம் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தண்டபாணி, தலைமை ஆசிரி யர் வினோத்குமார், கவுன் சிலர் தீபா மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ