உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குருப் 1 தேர்வில் முதலிடம் மாணவிக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

குருப் 1 தேர்வில் முதலிடம் மாணவிக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லையில் டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விவசாயின் மகளை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிழக்குத்தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் மாலதி தம்பதியரின் மகள் கதிர்செல்வி,27; பி.எஸ்.சி., அக்ரி படித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூலை மாதத்தில் நடந்த குருப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.தகவல் அறிந்த புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் மாணவி வீட்டிற்கு சென்று கதிர்செல்விக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டி வாழ்த்தினார்.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அருளழகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கனகசிகாமணி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன், முல்லைக்கோவன், முன்னாள் ஊராட்சி தலைவர் குரலரசன்,செல்வராசு, புகழேஸ்வரன், இளங்கோவன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை