குத்துச்சண்டை போட்டி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கடலுார்: கடலுார் அண்ணா உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.கடலுார் அண்ணா உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி நேற்று துவங்கியது. கடலுார் மாவட்ட குத்துச்சண்டை கழக மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிசங்கர், துணைத் தலைவர் சத்யராஜ், துணை செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி தனித்தனியாக நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள், ஜன., 3,4,5 ம் தேதிகளில் வேலுாரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசுஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சிதலைவர் சுதாகர், பயிற்சியாளர் சிவராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.