உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

மழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

நெய்வேலி : நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையினால் வீடுகள் இழந்து பாதிக்கப்பட்வர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்., நிவாரண உதவிகளை வழங்கினார்.வடக்குத்து ஊராட்சி பிள்ளையார் கோவில் தெரு ஆனந்த், இளங்கோவன், வள்ளி, தங்கசாமி, சுகன்யா, மனோன்மணி, கீழ் வடக்குத்து காலனி தாமோதரன், ராஜலட்சுமி, சந்தைவெளிப்பேட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரது வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது.பாதிக்கப்பட்ட மக்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து, அரிசி, புடவை, பாய், பெட்ஷீட், மற்றும் பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன், ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவை தலைவர் வீர ராமச்சந்திரன், துணை செயலாளர் ஏழுமலை, வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், வார்டு உறுப்பினர் ராஜ பூபதி, கீழ் வடக்குத்து கிளை கழக செயலாளர்கள் சுரேஷ், மணிகண்டன், நடராஜன், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை