உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.எல்.ஏ., நிவாரண உதவி

எம்.எல்.ஏ., நிவாரண உதவி

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டியில், சாந்தி சோமசுந்தரம் என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்து சேத மடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பாண்டியன் எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார். கூட்டுறவு வங்கி தலை வர் வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், துணை சேர்மன் முடிவண்ணன், நிர்வாகிகள் பாஸ்கர், சக்திவேல், கருணாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை